ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். திருவிகா, மாவட்ட துணைச் செயலர் பசுவை பி. சிவசாமி, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலர் விசிகே. ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்கச் செயலர் பொரணி கே. கணேசன், ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், முன்னாள் மாணவரணி செயலர் தானேஷ், நகர இளைஞரணி செயலர் சேரன்பழனிசாமி, துணைச் செயலர் என். பழனிராஜ், நகர பேரவை துணைத் தலைவர் டி.டி.செல்மணி, இளைஞர்,இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் நகரச் செயலர் வேங்கை என். ராமச்சந்திரன், நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் ஆயில்ரமேஷ், ரைஸ்குருசுவாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எம்.செல்வராஜ், பேங்க் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமையிலும், வெங்கமேட்டில் பாண்டியன் தலைமையிலும், லைட்ஹவுஸ்கார்னரில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பொரணி கணேசன் தலைமையிலும்
ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட ஜெ.பேரவை சார்பில் முன்னாள் எம்எம்எல்ஏவும், பேரவைச் செயலருமான எஸ்.காமராஜ் தலைமையில் கரூர் சேலம் பைபாஸ் சாலை முனியப்பன் கோயிலில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்ட கட்சியினர் பால்குடங்களை ஊர்வலமாக கோவைச்சாலை வழியாக எடுத்து கரூர் மாரியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அமமுக மாலை: கரூரில் அமமுகவினர் ஜெ.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணைமலையில் அமமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காதப்பாறை முன்னாள் ஊராட்சித் தலைவர் ஏ. தங்கவேல் தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர நிர்வாகிகள் சுந்தரவேல்,வையாபுரி, கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.