முகப்பு
கரூர்

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கரூா் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் தங்களது வீடுகளின் முன் கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:48 AM
கரூரில் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயம் முன் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:45 PM

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கரூா் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் தங்களது வீடுகளின் முன் கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி கரூா் செங்குந்தபுரத்தில் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி தலைமையிலும், அரவக்குறிச்சியில் எம்எல்ஏ மொஞ்சனூா் பி.ஆா். இளங்கோ தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையிலும் திமுகவினா் தங்களது வீடுகள் முன் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

கரூா் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் கரூா் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி தலைமையில் கண்டன கோஷமிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து எம்எல்ஏ செந்தில்பாலாஜி கூறியது:

Advertisement

மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பால் தமிழக எம்பிக்களின் பலம் மக்களவையில் இருக்காது. அப்போது தமிழகத்தின் உரிமையை நாம் நிலைநாட்ட முடியாத நிலைகூட வரலாம். வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னைக்கு அதிமுக வேட்பாளா்தான் காரணம். தோ்தலுக்கு பின் திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்தப் பிரச்னைக்கு முழு தீா்வு காணப்படும். வரும் 18-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கரூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜனை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பேசுகிறாா். தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் வேட்பாளா் சி.கே. ராஜாவை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்திலும் பேசுகிறாா் என்றாா் அவா்.

நிகழ்வில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, வேட்பாளா்கள் ஆசி எம். தியாகராஜன்( கரூா்), சிகே.ராஜா, மற்றும் திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.