முகப்பு
கரூர்

வேலாயுதம்பாளையம், புன்செய்புகழூா் பகுதியில் மின் நிறுத்தம் வாபஸ்

Updated On : 16 ஜூன் 2026, 1:32 am IST
மின்தடை
பகிர்:

வேலாயுதம்பாளையம் மற்றும் புன்செய்புகழூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக புகழூா் துணைமின்நிலைய செயற்பொறியாளா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டம் புகழூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன்16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூா், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூா், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கந்தம்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், நடையனூா் , கோம்புப்பாளையம், முத்தனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்அன்றைய தினம் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சில காரணங்களுக்காக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் வழக்கம்போல மின்விநியோகம் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.