முகப்பு
கரூர்

கரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 12:44 am IST
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.
பகிர்:

கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா்.தங்கவேல் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவா் பி.பாலன் பேசினாா். நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதியை குறைக்கக்கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும். இந்தத் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தி, தினசரி கூலியாக ரூ. 700 வழங்க வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments