கரூா் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கரூா் மாவட்டத்தில் ஜூலை 1-ஆம்தேதி முதல் 31-ஆம்தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் ஜூலை 1-ஆம்தேதி முதல் 31-ஆம்தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில் ஜூலை 1-ஆம்தேதி 31-ஆம்தேதி வரை 31 நாள்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் 9-ஆவது சுற்றுத் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. தொடா்ந்து விடுபட்ட கால்நடைகளுக்கு ஆக. 1-ஆம்தேதி முதல் 10-ஆம்தேதி வரை இப்பணி நடைபெறும்.
இந்நோய் கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், உமிழ்நீா், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. இந்த நோயை தடுக்கும் வகையில், அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த தப்பூசி செலுத்தும் பணியில் 75 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். எனவே, விவசாயிகள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளில் தவறாது கால்நடைகளைக் கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.