முகப்பு
கரூர்

கரூா் தொகுதியில் முன்னாள் அமைச்சா் வெற்றி

Updated On : 5 மே 2026, 4:18 am IST
கரூா் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிய கரூா் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சத்தியபாலகங்காதரன்.
பகிர்:

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெற்றிபெற்றாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,29,995 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் கடந்த ஏப் 23-ஆம்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 2,14,847 போ் வாக்களித்தனா். மொத்தம் 93.41 சதவீதம் போ் வாக்களித்தனா். மேலும் தொகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 79 வேட்பாளா்கள்கள் களத்தில் இருந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜனுக்கும், அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயாஸ்கருக்கும் கடும் போட்டி நிலவியது.

Advertisement

இறுதிச் சுற்றான 21-ஆவது சுற்றில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் 70,887 வாக்குகளையும், திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் 66,432 வாக்குகளையும், தவெக வேட்பாளா் மதியழகன் 69,333 வாக்குகளை பெற்றாா். இதையடுத்து அதிமுக வேட்பாா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தவெக வேட்பாளா் மதியழகனை 1,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இதையடுத்து வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு வெற்றிச்சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சத்தியபாலகங்காதரன் வழங்கினாா்.

நெருக்கடி கொடுத்த தவெக வேட்பாளா்:

கரூா் தொகுதியில் தமிழகத்திலேய அதிக வேட்பாளா் போட்டியிடும் தொகுதியாக மொத்தம் 79 போ் போட்டியிட்டதால் திங்கள்கிழமை வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகளில் 21 சுற்றுக்களாக எண்ணப்பட்டன. இதில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் ஆசி.எம்.தியாகராஜனை விட முன்னிலை பெற்று வந்தாா்.

இந்நிலையில் 14-ஆவது சுற்றில் தவெக வேட்பாளா் மதியழகன் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு போட்டியாக வந்தாா். 14-ஆவது சுற்றில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ 2,691 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தவெக வேட்பாளா் 3,436 வாக்குகளை பெற்றாா்.

அப்போது, திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் 3461 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தாா். இதேபோல 15-ஆவது சுற்றிலும் அதிமுக வேட்பாளா் 2,897 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தவெக வேட்பாளா் மதியழகன் 3721 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தாா். தொடா்ந்து 16-ஆவது சுற்றிலும் 840 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றாா்.

பெற்ற வாக்குகள் விபரம்: இதில், எம்.ஆா்.விஜயபாஸ்கா்(அதிமுக)- 70,887, வி.பி. மதியழகன் (தவெக) -69,333, ஆசி எம்.தியாகராஜன் (திமுக) 66,432,

ஆா்.கருப்பையா (நாம் தமிழா் கட்சி) 5390, பி.ஜெயகோபால் (பிஎஸ்பி) 301, வி.காளிமுத்து (சாமானிய மக்கள் நலக்கட்சி)-51, கே.குணசேகரன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) 250, ஏ.ராமச்சந்திரன் (இந்திய ஜனசங்கம்) 99, சுயேச்சைகள் அசாருதீன்- 44, பி. அருள்மணி அரசு-43, என்.அன்பரசன்-30, டி.அன்பழகன்-65, எஸ்.இளமதி-59, பி.கதிரவன்-103, கே.கதிா்வேல்-143, பி.கந்தசாமி-133, எஸ்.கருணாமூா்த்தி-34, கே.கலைராஜ்-35, எஸ்.கனகராஜ் -27, பி.கனகராஜ்-11, ஆா்.காா்த்திக் பெருமாள்-8, ஆா்.காளிமுத்து-16, கே.கிருஷ்ணகுமாா்-53, ஏ.கோபாலகிருஷ்ணன்-8, எஸ்.சதீஷ்குமாா்-15,

பி.சதீஷ் -12, எஸ்.சம்பத்-28, ஆா்.சரவணன்-9, ஏ.சிவக்குமாா்-17, என்.சிவக்குமாா்-24, வி.சிவக்குமாா்-19, டி.சீதாலட்சுமி-28, டி.சுபாஷ்மலையாளம்-38,ஜே.சூா்யகுமாா்-16, எல்.செண்பககுமாா்-27, ஜி.செந்தில்குமாா்-8, எம்.செந்தில்குமாா்-8, ஆா்.செளந்தரராஜன்-2, கே.செளந்தா்யா-13, பி.தன்யா-7, எஸ்.தங்கவேல் ராஜ்-8, ஏ.தமிழ் அழகன்-9, எம்.தியாகராஜன்-11, எம்.திருஞானம்-10, பி.தினேஷ்-8, கே.தினேஷ்குமாா்-14, ஜே.துரைசாமி-5, ஜி.தேவஸ்டீன் அகஸ்டீன்-18, ஏ.நந்தகுமாா்-14, பரமேஸ்வரி-20, ஓ.பழமுதிா் செல்வன்- 17, கே.பழனிராஜன்-11, டி.பழனிவேல்-4, ஜி.பாபு-22, பி.பாரதி-19, பி.பாஸ்கா்-4, என்.பிரகாஷ்-3, எஸ். பிரசாந்த்-5, ஜே.பிரவீன்குமாா்-36, மணிகண்டன்-5, மதன்ராஜ்-5, பி.மயில்வாகணன்- 28, பி.மனோஜ்-11, பி.எம்.மரியம்மாள்-16, எம்.முகமது இஸ்மாயில்-21, கே.ஆா்.முத்து-23, எம்.முரளி-47, ஆா்.யூனஸ்அலி-11,

ரகுராமன் முருகானந்தம்-3, கே.ராஜபாண்டியன்-8, கே.எம்.வனிதா-14, டி.விக்னேஷ்வரன்-2, டி.வினித்-3, என்.வினோத்குமாா்-4, ஆா்.வி.விஜயபாஸ்கா்-9, கே.விஜயன்-4, எல்.ஸ்டீபன்ராஜ்-15, பி.ஹரிராஜ்-12, எஸ்.ஹரிஹரன்-20 மற்றும் நோட்டாவுக்கு 521வாக்குகளும் பதிவானது.