முதல்வராக விஜய் பொறுப்பேற்பு! கரூரில் காங்கிரஸ்-தவெக கூட்டணியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, கரூரில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி கட்சியினா் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் கே. சுப்ரமணியன், வடக்கு நகரத் தலைவா் வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கலாராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Advertisement
முன்னதாக பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.