முகப்பு
பெரம்பலூர்

அடையாள அட்டை வழங்க நாட்டுப்புறக் கலைஞர்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தங்களுக்கு நலவாரிய உறுப்பினர் மற்றும் அடையாள அட்டை

Updated On : 25 டிசம்பர் 2018, 9:37 am IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தங்களுக்கு நலவாரிய உறுப்பினர் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞர்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமியிடம் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:
தமிழகத்தின் பாரம்பரிய  மயிலாட்டம்,  புலியாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலைகள் நலிவடைந்துவிட்டன.
இதனால் இக்கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதோடு, பலர் வறுமையிலும் வாடுகின்றனர். இந்த கலையையும், கலைஞர்களையும்  அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். எனவே,  நாட்டுப்புறக் கலைகள் உள்பட நமது பாரம்பரியத்தையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் பாதுகாக்க வேண்டும்.  மேலும், மாவட்டத்தில் வறுமையால் வாடும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக அரசின் நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும்  அடையாள அட்டையும் வழங்க வேண்டும்.
பொது கழிப்பறையைச் சீரமைக்க வலியுறுத்தல்:  சின்னவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த ரா. வரதராஜன்  அளித்த மனு: சின்னவெண்மணி கிராமத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக்கழிப்பறை பயனற்று காணப்படுகிறது. 
இதை சீரமைத்து, பயன்பாட்டுக்கு  கொண்டுவர வேண்டுமென  முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவும், அதன் நகல்,  மாவட்ட ஆட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அளிக்கப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மனு மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், கிராமப்புற மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும்.                                                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments