முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில்  ஜூலை 26-இல் கடனுதவி முகாம்

பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் கடனுதவி முகாமில் சிறுபான்மையினர் பங்கேற்க அழைப்பு

Updated On : 23 ஜூலை 2018, 8:55 am IST
பகிர்:

பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் கடனுதவி முகாமில் சிறுபான்மையினர் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திடும் விதமாக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. இக்கழகத்தின் கீழ், தனிநபர் தொழில் தொடங்க கடனுதவி ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.
சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலும், கல்விக் கடன் திட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு, அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 
ஆவின் நிறுவனத்தின் மூலமாக 2 கறவை மாடுகள் வாங்கிட ரூ. 70 ஆயிரம் வரையிலும், ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கிட, தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட கடன் திட்டங்கள் அனைத்தும், சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு நிபந்தனைக்குள்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட கடன் திட்டங்கள் குறித்து லோன் மேளா, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஜூலை 26 ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு, டாம்கோ கடன் திட்டங்களில் கடனுதவிகளை பெற்று பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments