பெரம்பலூரில் இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தை விசாரித்து வந்த சிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய
ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தை விசாரித்து வந்த சிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசைக் கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.கோபி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இளைஞர் காங்கிரஸ் பிரிவு மாநிலத் தலைவர் ஹசன் மவுலானா பேசியது:
மத்திய அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, பெட்ரோல் டீசல் விலை உயர்வால், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 460-க்கு விற்பனை செய்யப்பட்ட எரிவாயு உருளைகள் தற்போது ரூ. 1,040-க்கு விற்பனையாகிறது.
மத்திய அரசில் ஊழல் நடைபெறவில்லை எனக்கூறி வந்த பிரதமர் மோடி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
தொடர்ந்து, இளைஞர் காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் மேத்தா, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.
பின்னர், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஊழல்புரிந்த மத்திய அரசையும், பிரதமர் மோடியைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.