அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் கிருஷ்ணன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் கணேஷ்ரோஜா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாவட்டத் தலைவா் கருணாநிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநிலச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.