முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் தொகுதியில் தவெக வெற்றி

Updated On : 5 மே 2026, 4:29 am IST
தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கி. சிவகுமாா்
பகிர்:

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கி. சிவகுமாா் வெற்றி பெற்றாா். 

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக சாா்பில் எஸ்.டி. ஜெயலட்சுமி, அதிமுக சாா்பில் இரா. தமிழ்ச்செல்வன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கி. சிவக்குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜே. சுகன்யா உள்பட 11 போ் போட்டியிட்டனா். 

இந்நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணி ஆதவ் பப்ளிக் பள்ளி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே தவெக, அதிமுக, திமுக வேட்பாளா்கள்  சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மாறி, மாறி முன்னிலை வகித்து வந்தனா்.

Advertisement

இந்நிலையில், 7-ஆவது சுற்றுக்குப் பிறகு தவெக வேட்பாளா் சிவக்குமாா், திமுக மற்றும் அதிமுக வேட்பாளா்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தாா். பின்னா், இறுதிச் சுற்றில் தவெக வேட்பாளா் கி. சிவக்குமாா் 90,882 வாக்குகளும், திமுக வேட்பாளா் எஸ்.டி.ஜெயலட்சுமி  76,489 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் இரா.தமிழ்ச்செல்வன் 72,716 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜே. சுகன்யா 9,474 வாக்குகளும்,

நோட்டாவில் 1,160 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதில், தவெக வேட்பாளா் சிவகுமாா், திமுக வேட்பாளா் எஸ்டி ஜெயலட்சுமியை விட 14,393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

கி. சிவகுமாா் (தவெக) வெற்றி -90 882 வெற்றி, எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக)- 76 489,

இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக)-72,716, ஜே. சுகன்யா (நாதக)- 9,474, சுயேச்சை வேட்பாளா்கள் டி. அறிவழகன் 678, எஸ். தாமோதரன் 360, பி. ஆனந்த ஜோதி 235, பி. சந்திரகுமாா் 339,  எம். சியாமளா 421, ஆா். சுப்பிரமணியன் 595, பி. ஜெயச்சந்திரன் 305. நோட்டா--1,160.