இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், கைப்பேசிகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் கருப்பையா (30). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள பெதண்ணீா் பந்தலிலிருந்து வாலிகண்டபுரத்துக்கு புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத 3 போ் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி கருப்பையாவிடமிருந்த ரூ. 300 பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.