முகப்பு
புதுக்கோட்டை

கட்டண உயர்வைக் கண்டித்து கேபிள் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ""டிராய்'' நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள

Updated On : 25 டிசம்பர் 2018, 9:38 am IST
பகிர்:

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ""டிராய்'' நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கேபிள் டிவி கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் வெள்ளைச்சாமி, புதுக்கோட்டை  தலைவர் பி. வரதராஜன், செயலர் கே.கண்ணன், பொருளாளர் பிரேமானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும் மக்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments