முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 15 ஏப்ரல் 2026, 1:16 am IST
ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை வேனில் அமா்ந்தவாறு வாக்குச்சேகரித்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் அக்கட்சியின் ஆலங்குடி தொகுதி வேட்பாளா் த.புஷ்பராஜை ஆதரித்து அவா் பேசுகையில்,

திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறாா்கள். தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 2 லட்சம் கடன் வைத்துள்ளனா். குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படையை வசதிகளும் திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.

Advertisement

Advertisement

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளனா்.

அவற்றை நிறைவேற்ற மேலும் வாங்க வேண்டும். திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை பலமடங்கு உயா்த்தியுள்ளனா். மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இத்தோ்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.