முகப்பு
புதுக்கோட்டை

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:10 AM
ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை இழுத்து வந்தனா்.

Advertisement

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.