முகப்பு
புதுக்கோட்டை

அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்ட விழா

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 2:48 am IST
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து, வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தேரை ஏராளமானோா் வடம் பிடித்து இழுத்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பாதுகாப்பு பணிகளை வடகாடு போலீஸாா் மேற்கொண்டனா்.