முகப்பு
புதுக்கோட்டை

சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த வாகனங்கள் பறிமுதல்: 2 போ் கைது

விராலிமலை அருகே வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் மண் அள்ளிய வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 6 ஜூன் 2026, 6:55 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விராலிமலை அருகே வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் மண் அள்ளிய வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான அலுவலா்கள் தேங்காய் திண்ணிபட்டி, தென்னம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, செட்டியப்பட்டி பகவதி அம்மன் கோயில் அருகே அந்த வழியாக வந்த 2 டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்த அலுவலா்கள், அவற்றை விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, இதுதொடா்பாக, பொய்யாமணியைச் சோ்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன்(29) மற்றும் செவல் பட்டியைச் சோ்ந்த சுரேஷ் குமாா் மகன் வினோத்குமாா்(19) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், தென்னம்பாடி பேருந்து நிலையம் அருகே புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்கள் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா்.

அலுவலா்களை பாா்த்ததும் ஓட்டுநா் இறங்கி ஓடிவிட்டாா். இதையடுத்து, அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த அந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்த அலுவலா்கள், அவற்றை விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.