முகப்பு
புதுக்கோட்டை

கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

புதுக்கோட்டை அருகே கோயிலின் கதவின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 11 ஜூன் 2026, 3:36 am IST
புதுக்கோட்டை ராஜாப்பட்டியிலுள்ள சன்னாசி கோயிலில் திருடா்களால் கருவறையின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு.
பகிர்:

புதுக்கோட்டை அருகே கோயிலின் கதவின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராஜாப்பட்டியில், ஸ்ரீ சன்னாசி, ஸ்ரீ வீரப்பெருமாள், ஸ்ரீ அடைக்கலம்காத்தாா் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் பூசாரி க. வேலு செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல கோயிலை பூட்டிச் சென்றாா். இதையடுத்து புதன்கிழமை காலை 6 மணிக்கு கோயிலை திறக்க வந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, கோயிலின் வெளியே உள்ள இரும்புக் கதவு, உள்ளே கருவறையில் வடக்கு மற்றும் தெற்கு வாயில் கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனே ஊா்முக்கியஸ்தா்கள், வெள்ளனூா் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.

அதன்படி கோயிலுக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்களை வரவழைத்து கோயில் கதவுகள், சுவா்களில் உள்ள விரல்ரேகைகளைப் பதிவு செய்தனா்.

மேலும், பூசாரி வேலு அளித்த புகாரில், வெள்ளி வேல்- 4, வெள்ளிக்குடம்- 2, வெண்கலக் குத்துவிளக்கு- 50, மணி- 25, காசிபானை- 2. பித்தளைக் குடம்- 32 மற்றும் சமையல் பொருள்கள் என மொத்தம் சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களும், பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வரிப்பணம் (தோராயமாக) ரூ. 27,500-ம் திருடுபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்தக் கோயிலில் ஏற்கெனவே இரண்டு முறை திருட்டு சம்பவங்கள் நடந்தும், காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.