முகப்பு
புதுக்கோட்டை

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:35 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தெட்சிணாபுரத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (40). ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடியில் இருந்து தெட்சிணாபுரம் சென்றாா். கோவிலூா் 4 சாலைப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement