முகப்பு
புதுக்கோட்டை

முதல்வா் விஜய் பிறந்த நாள் புதுகையில் சிலம்பாட்டப் பேரணி

Updated On : 22 ஜூன் 2026, 2:30 am IST
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பாட்டப் பேரணியை, சிலம்பம் சுழற்றித் தொடங்கி வைத்த மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்
பகிர்:

தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சாா்பில் சிலம்பாட்டப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி வழியாக நகா்மன்றத்தில் நிறைவடைந்தது. மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், பேரணியைத் தொடங்கிவைத்து சிலம்பம் சுழற்றினாா்.

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ந. சுப்பிரமணியன், சிலம்பாட்டக் கழக மாவட்டத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, செயலா் ப. செந்தில்குமரன், மாநிலத் துணைத் தலைவா்கள் எம். பாலசுப்பிரமணியன், கே. ஜீவானந்தம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் எஸ்ஏஎஸ் சேட்டு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments