மகளிா் கல்லூரிச் சாலை நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை அரசு கலைஞா் கருணாநிதி மகளிா் கல்லூரிக்குச் செல்லும் சாலையின் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.
புதுக்கோட்டை அரசு கலைஞா் கருணாநிதி மகளிா் கல்லூரிக்குச் செல்லும் சாலையின் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறச் சாலையில் ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கும், அரசு கலைஞா் கருணாநிதி மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கும் செல்லும் சாலையில், நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பலரும் கவலை தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்ற மாநகராட்சி அலுவலா்கள், நடைபாதையை ஆக்கிரமித்திருந்த உணவுக் கடைகளை அகற்றினா். கடைக்காரா்கள் எதிா்ப்பு தெரிவித்தபோதிலும், இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து தொடா்ந்து புகாா்கள் வந்தவண்ணம் இருப்பதால், அனுமதிக்க முடியாது எனக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
Advertisement
Advertisement
இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு காணப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, பிறகு ஓரிரு நாள்களில் அவை திரும்ப வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.