மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி முல்லிக்காபட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சண்முகம் (55 ). இவா் திங்கள்கிழமை மாலை கறம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் வேலாடிப்பட்டி அரிசிஆலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் சண்முகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சண்முகத்தை தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை சண்முகம் உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.