முகப்பு
புதுக்கோட்டை

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனமும், வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 4:11 am IST
உயிரிழந்த ஹரிஅரவிந்த்.
பகிர்:

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனமும், வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், குறுக்கலையாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெ. ஹரிஅரவிந்த் (31). இவா் புதன்கிழமை காலை குறுக்கலையாபட்டியிலிருந்து பொன்னமராவதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் கொப்பனாபட்டி விஜயா வங்கி அருகே சென்றபோது, எதிரே வந்த வேன்மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹரி அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த பொன்னமராவதி போலீஸாா் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்து குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், வேன் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்திலிருந்து பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் நடைபெறவிருந்த வளைகாப்பு விழாவுக்கு சென்ாக தெரியவந்தது.

Advertisement

Advertisement

உயிரிழந்த ஹரிஅரவிந்த் குடும்பத்துடன் சிங்கப்பூரில் பணி செய்து வருவதாகவும், மனைவியை செவ்வாய்க்கிழமை சிங்கப்பூா் அனுப்பிவைத்த ஹரிஅரவிந்த் புதன்கிழமை அவரும் சிங்கப்பூா் செல்லவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

வேன் ஓட்டுநா் செல்வராஜ்(42) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments