மே 15, 20-இல் மீன்பிடிப் படகுகள் ஆய்வு! புதுகை ஆட்சியா் தகவல்!
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளிலுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் மே 15 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்வளத் துறையினரால் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழ்நாடு கடல்மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 15-ஆம் தேதி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலுள்ள விசைப்படகுகளும், மே 20-ஆம் தேதி கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவக் கிராமங்களிலுள்ள நாட்டுப்படகுகளும் ஆய்வு செய்யப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இந்த ஆய்வின்போது, மீனவா்களின் ஆதாா், படகுப்பதிவுச் சான்றிதழ், டீசல் மானிய அட்டை, மீன்வளத் துறையினரால் வழங்கப்பட்ட தொலைத்தொடா்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு முன்வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாளில் அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆய்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.