மே 14-ல் 4 ஊராட்சிகளில்"அம்மா' திட்ட முகாம்
கும்பகோணம் வட்டத்தில் மே 14 ஆம்தேதி(செவ்வாய்க்கிழமை) நான்கு ஊராட்சிகளில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கும்பகோணம் வட்டத்தில் மே 14 ஆம்தேதி(செவ்வாய்க்கிழமை) நான்கு ஊராட்சிகளில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்காக மக்களைத் தேடிச் சென்று அதிகாரிகள் தீர்வு வழங்குவதற்காக அம்மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மே 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவலஞ்சுழி, தேவனாஞ்சேரி, ஏரகரம், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கும்பகோணம் வட்டாட்சியர் ஸ்ரீமாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.