குடந்தையில் விஏஓ-க்கள் ஆர்ப்பாட்டம்
மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட- கோட்ட மாறுதல் கேட்டு மனு செய்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக பணிமாறுதல் வழங்க வேண்டும். மக்கள் குறைதீர் முகாம் செலவினத் தொகை வழங்க வேண்டும்.
இணையதள செலவினத் தொகையை வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் ஆய்வுக்கு வரக்கூடாது. மணல் திருட்டில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலரை மட்டும் காரணம் காட்டாமல் காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினரையும் சேர்த்து மணல் திருட்டை பிடிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.