தஞ்சையில் கிரிக்கெட் வீரர்கள் சங்கமம் நிகழ்ச்சி
தஞ்சாவூரில் தஞ்சை மாவட்டச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூரில் தஞ்சை மாவட்டச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் 30 ஆண்டுகளுக்கு முன்பும், அதற்கு பின்பும் தஞ்சை மாவட்ட மற்றும் மாநில கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்போது சிலர் வெளிநாடுகளிலும், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலும் பணியாற்றி வருகின்றனர். முன்னதாக இவர்கள் சந்தித்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
முன்னாள் வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரு அணிகளாகப் பிரிந்து கிரிக்கெட்டும் விளையாடினர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் வீரர் எஸ். குமார் தலைமை வகித்தார். அனைவரும் சேர்ந்து முன்னாள் கிரிக்கெட் சங்க செயலரும், பயிற்சியாளருமான ஜான் மனோகரன் இன்பராஜூக்கு பாராட்டு தெரிவித்தனர். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக மாநில மற்றும் மாவட்ட கிரிக்கெட் அணிகளில் பங்கேற்று விளையாடி உள்ளனர்.
இவருக்கு நினைவு பரிசு மற்றும் ரொக்கப் பரிசை மூத்த பயிற்சியாளர் அன்வர் வழங்கினார். டி. குமார், ராக்கெட் கார்த்திகேயன், செந்தில், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தூய பேதுரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராஜகுமாரன் நினைவு மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.