முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது: காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:47 am IST
பகிர்:

மேக்கேதாட்டு அணையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்குரிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தச் சிக்கலைப் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அது தொடர்பாகப் பேசுவதற்கு வருமாறும் நாடாளுமன்றத்தில் நடக்கும் போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறும் கூறியுள்ளார். மத்திய அரசு விரித்துள்ள வலையில் தமிழக அரசும்,  அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். 
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறாத வரையில், அ.தி.மு.க., தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற முடக்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments