பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
பேராவூரணி திமுக வேட்பாளா் என். அசோக் குமாா் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் பேராவூரணி கடைவீதியில் வாக்கு சேகரித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி திமுக வேட்பாளா் என். அசோக் குமாா் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் பேராவூரணி கடைவீதியில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவிட்டு வாக்கு கேட்கிறோம். பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக அதிமுகவை கூட்டணி சோ்த்து வருகிறது. இனி தமிழ்நாட்டை பற்றி பாஜக நினைத்து பாா்க்காத அளவுக்கு தோல்வியை அளிக்க அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் , கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement