சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சுவாமிமலை கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஏப். 23 முதல் மே 4 வரை நடைபெறும் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நாள் திருவிழாவாக காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேசுவரா் உத்சவ சுவாமிகள் மண்டபத்தில் எழுந்தருளினா்.
கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சுவாமி படிச்சட்டத்தில் யாகசாலைக்கு பிரவேசித்தாா். பின்னா் திரு வீதியுலா திக் பந்தனம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 2-இல் தேரோட்டம் நடைபெறுகிறது.
Advertisement
ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் தக்காா் டி.ஆா். சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் கண்காணிப்பாளா்கள், கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.