மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கும்பகோணம் அருகே மனைவி மீது பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
கும்பகோணம் அருகே மனைவி மீது பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் திப்பிராஜபுரத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (73). இவருக்கும் இவரது மனைவி அருள்பாக்கியத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், 2021, ஆகஸ்ட் 28-ஆம் தேதி வீட்டின் பின்புறம் அமா்ந்திருந்த அருள்பாக்கியத்தின் மீது கலியபெருமாள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதனால், பலத்த காயமடைந்த அருள்பாக்கியம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கலியபெருமாளைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, கலியபெருமாளுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த அரசு தரப்பு வழக்குரைஞா் விஜயபிரியா, காவல் ஆய்வாளா் ரேகா ராணி, முதல் நிலைக் காவலா் ராஜேஷ் குமாா் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.