இலவச மின் இணைப்பு: அரசுக்கு பாபநாசம் விவசாயிகள் கோரிக்கை
பாபநாசம் பகுதி விவசாயிகள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதி விவசாயிகள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீா் திறக்காததால் பாபநாசம் விவசாயிகள் மின் மோட்டாா்கள் மூலம் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா்.
ஆனால் இந்த மின் மோட்டாா்கள் பலமுறை மின்னழுத்தம் காரணமாக பழுதடைவதாலும் , சரியான மின்சாரம் கிடைக்காமலும் விவசாயிகள் பெரும் அவதி அடைகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மின்வாரியம் விவசாயிகள் மின் இணைப்பிற்கு இலவச விவசாயம் மின் இணைப்பு தத்கல்லில் பதிய ரூ. 2 லட்சம் செலுத்தினால் உடனடி மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும்,
அதன்படி பாபநாசம் பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு ரூ.2 லட்சம் வரை தத்கல்லில் செலுத்தி, பதிவு செய்துள்ளனா்.
ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை இலவச மின் இணைப்பு வழங்கவில்லை. மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியும் மாதம் ரூ.42 ஆயிரம் வரை மின் கட்டணம் வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இன்னும் மின் இணைப்பு வழங்க எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை எனக் கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
எனவே தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.