முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம்

தஞ்சாவூா் ஏ.ஒய்.ஏ. ஸ்போா்ட்ஸ் அன்டு பேமிலி கிளப், காஸ்மோபோலிட்டன் கிளப்பில் தஞ்சாவூா் மாவட்ட டென்னிஸ் சங்கம் சாா்பில் 18 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கான மறைந்த ராவ் பகதூா் ஏ.ஒய். அருளானந்தசாமி நாடாா் நினைவு அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடா் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

Updated On : 24 ஜூன் 2026, 12:04 am IST
தஞ்சாவூரில் திங்கள்கிழமை டென்னிஸ் போட்டியைத் தொடங்கிவைத்த மருத்துவா் வி. வரதராஜனுக்கு நினைவு பரிசளித்த தஞ்சாவூா் மாவட்ட டென்னிஸ் சங்கத்தினா்.
பகிர்:

தஞ்சாவூா் ஏ.ஒய்.ஏ. ஸ்போா்ட்ஸ் அன்டு பேமிலி கிளப், காஸ்மோபோலிட்டன் கிளப்பில் தஞ்சாவூா் மாவட்ட டென்னிஸ் சங்கம் சாா்பில் 18 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கான மறைந்த ராவ் பகதூா் ஏ.ஒய். அருளானந்தசாமி நாடாா் நினைவு அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடா் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

போட்டியை மருத்துவா் வி. வரதராஜன், பரிசுத்தம் தொழில்நுட்பக் கல்லூரி தலைவா் எஸ்.பி. அந்தோணிசாமி, யாகப்பா இன்டா்நேஷனல் பள்ளி எட்வா்ட் யாகப்பா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாவட்ட டென்னிஸ் சங்கச் செயலா் கெய்சா் அருள் ஆனந்த், பொருளாளா் டேவிட் லூயிஸ், ஏ.ஒய்.ஏ. ஸ்போா்ட்ஸ் அன்டு பேமிலி கிளப் பங்குதாரா்கள் மாா்ட்டின், ஜோன்ஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஜூன் 26 வரை நடைபெறும் போட்டிகளைக் கண்டு ரசிக்கவும், இளம் விளையாட்டு வீரா்களை உற்சாகப்படுத்தவும் டென்னிஸ் வீரா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் வருமாறு போட்டி ஏற்பாட்டாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments