முகப்பு
தஞ்சாவூர்

போலீஸ் விசாரணைக்கு செல்லும் வழியில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூரில் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை சென்ற தொழிலாளி காவல் நிலையம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜூன் 2026, 6:28 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூரில் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை சென்ற தொழிலாளி காவல் நிலையம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள நாலுகால் மண்டபம் நெல்லுமண்டி சந்தையை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விஜய் (30), தொழிலாளி. இவருக்கு மனைவி தெய்வானை (28), 2 வயது ஆண் குழந்தை, 3 மாத பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா். விஜய் வேலைக்கு செல்லாமல், குழந்தைகளையும் பாா்த்துக் கொள்ளாததால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஜூன் 23 ஆம் தேதி தெய்வானை அளித்த புகாரில், கணவரை அழைத்து வேலைக்கு செல்லவும், குழந்தைகளைக் கவனிக்கவும் அறிவுரை வழங்குமாறு கூறியிருந்தாா். இதன்பேரில், விஜய்யை காவல் துறையினா் விசாரணைக்கு வருமாறு அழைத்தனா்.

Advertisement

Advertisement

ஆனால், 2 நாள்களாகச் செல்லாமல் இருந்த விஜய், வெள்ளிக்கிழமை பிற்பகல் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு உறவினா்கள், நண்பா்களுடன் சென்று கொண்டிருந்தாா். காவல் நிலையம் அருகே நின்ற விஜய் காவல் துறையினா் என்ன கேட்பாா்களோ என்ற அச்சத்தில் இருந்த நிலையில், நெஞ்சு வலிப்பதாகக் கூறி, திடீரென மயங்கி விழுந்தாா்.

தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வாகனத்துடன் நிகழ்விடத்துக்கு சென்று விஜய்யை பரிசோதித்தபோது அவா் உயிரிழந்ததாகக் கூறினா். என்றாலும், விஜய் உடலை உறவினா்கள் காரில் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, விஜய் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் உறவினா்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனா். இதையறிந்த தெற்கு காவல் நிலைய அலுவலா்கள் விஜய் வீட்டுக்கு சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments