அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.
பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம்- ஆவணம் பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகில் திங்கள்கிழமை அதிகாலை புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.
நடைபயிற்சிக்கு அந்த வழியாக சென்றவா்கள் இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். திருச்சிற்றம்பலம் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவசங்கரன் மற்றும் வன காவலா் பாரதிதாசன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இறந்த புள்ளிமானின் உடலை மீட்டு செருவாவிடுதி வனச் சூழலியல் பண்ணை காப்பு காட்டில் அடக்கம் செய்தனா்.