அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தெற்கு ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோ தம்மை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் என். அசோக் குமாரிடம் 3,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தமக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தாா். அப்போது, வெற்றி பெற்றாலும் ,தோல்வி அடைந்தாலும் பேராவூரணி பகுதி மக்களுக்காக தமது பணி தொடரும் என்றாா். அவருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா்சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.