முகப்பு
தஞ்சாவூர்

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் தவெகவினா்.

Updated On : 9 மே 2026, 3:24 am IST
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் தவெகவினா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் ஆளுநரைக் கண்டித்தும், தவெகவை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், சேவா தளம் மாநிலத் துணைத் தலைவா் திருஞானம், மாவட்டத் துணைத் தலைவா் நாகராஜ், மாவட்டச் செயலா் சுரேந்தா், தவெக மாநகரச் செயலா் வசந்த், பகுதி செயலா்கள் சுரேஷ், பிரவீன், பாலாஜி, முத்து, மகளிா் அணி அமைப்பாளா் பைரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement