பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!
பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டை வட்டம், பரங்கிவெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரெ. தங்கவேல் (60). இவா் சனிக்கிழமை கரம்பயம் அருகன்கொல்லை பிரிவுச் சாலை அருகேயுள்ள கடைக்கு சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement