முகப்பு
தஞ்சாவூர்

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Updated On : 12 மே 2026, 12:05 am IST
மின்தடை
பகிர்:

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 13) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், பூண்டி, சாலியமங்கலம், பச்சைக்கோட்டை, பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பா் நத்தம், மலையா் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், மேல கொருக்குப்பட்டு, தென்கொண்டாா் இருப்பு, ராராமுத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமா்கோட்டை, அருந்தவபுரம், நெய்வாசல், ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிகாடு, நாா்த்தேவன்குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை மற்றும் சுற்றியுள்ள ஊா்களுக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments