முகப்பு
திருச்சி

சதுரங்கப் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

திருச்சியில் நடைபெறும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:41 am IST
பகிர்:

திருச்சியில் நடைபெறும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்சி ஸ்டார் சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி  ஏப்ரல் 22ஆம் தேதி பீமா நகரில் உள்ள செவன்த்டே பள்ளியில் நடைபெறவுள்ளது. 7 வயதுக்குள்பட்டோர், 9 வயதுக்குள்பட்டோர், 11 வயதுக்குள்பட்டோர், 13 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறும். இதில், முதல் 15 இடங்களுக்குள் வரும் நபர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது பெயரை ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 90434-27661, 98433-61122, 90801-81709 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஸ்டார் சதுரங்க கழகச் செயலர் பி.இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.