குடிநீர் கோரி முற்றுகை
குடிநீர் போதிய அளவில் வழங்கக் கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடத்துடன் சென்ற பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
குடிநீர் போதிய அளவில் வழங்கக் கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடத்துடன் சென்ற பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்தது தெற்கியூர். இந்தக் கிராமத்துக்கு சிங்களாந்தபுரத்திலிருந்து தண்ணீர் பகிர்மானக் குழாய் அமைக்கப்பட்டு நீர் வழங்கப்படுகிறது. தெற்கியூர் கிராம மக்களுக்கு ஊராட்சி சார்பில் அளிக்கப்படுகிற நீரானது போதிய அளவில் இல்லை. இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று துறையூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சகுந்தலாவை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து தெற்கியூரில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், தெற்கியூரில் குழாய் போடும் பணி முழுமையாக நிறைவடைந்ததும் குடிநீர் பிரச்சினை சீராகும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதைக் கேட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.