குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மணப்பாறை வட்டத்தைச் சேர்ந்த 11 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் விதவை உதவித் தொகையாக தலா ரூ. 1000 வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி வழங்கினார்.
இக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக் கோருதல், பட்டா மாறுதல், சாதி சான்று, இதர சான்றுகள் தொடர்பாக 167 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், உதவித் தொகை கோரி 36 மனுக்கள், அடிப்படை வசதி கோரி 14 மனுக்கள், புகார் தொடர்பாக 27 மனுக்கள் என மொத்தம் பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய 502 மனுக்கள் பெறப்பட்டு உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி அறிவுறுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.