முகப்பு
திருச்சி

பயிர்களை விற்பனைக்கு கொண்டுவருவதில் சிக்கல்: கொள்ளிடம் மேலணையில் தற்காலிக மண்பாதை அமைக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் மேலணையில் மதகுகள் உடைந்துள்ளதால் காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 

Updated On : 25 டிசம்பர் 2018, 9:51 am IST
பகிர்:

கொள்ளிடம் மேலணையில் மதகுகள் உடைந்துள்ளதால் காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராகவுள்ள பயிர்களை விற்பனைக்கு கொண்டுவருவதில் பெரிதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்காலிக மண்பாதை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரியாற்றின் கொள்ளிடம் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளை இணைக்கும் பாலமாக மேலணை இருந்து வந்தது. மேலணையின் மேல் வாகனங்கள் செல்லும் வகையில் வசதி இருந்ததால் இருகரை மக்களுக்கும் போக்குவரத்துக்கு பெரிதும் எளிதாக இருந்தது. மேலணையில் 9  மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் கடந்த  5 மாதங்களாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், வடகரை, தென்கரை பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் 50 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் சென்று வரும் நிலை உருவாகியுள்ளது. தை மாதம் பயிர்கள் அறுவடையை எதிர்நோக்கியுள்ள சூழலில் மேலணையில் போக்குவரத்து தடைபட்டிருப்பது விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் பெரிதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, தற்போது உள்ள சூழ்நிலையில்,  மேலணையில் தற்காலிக பாலம் அமைப்பதோ, புதிய பாலம் அமைப்பதோ உடனடி நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே, கடந்த 2015ஆம் ஆண்டு கொள்ளிடம் பாலம் மராமத்து பணிகள் நடைபெற்றபோது மேலணைக்கு கீழே பொதுப்பணித்துறை மூலம் வாகன வசதிக்காக மண்பாதை அமைத்துத் தரப்பட்டது. அதேபோல்,  மீண்டும் மண்பாதை அமைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன், காவிரி ஆறு, ராமவாத்தலை வாய்க்கால், கொடியாலம் மற்றும் காட்டுகுளத்தான் மதகு பாசனதாரர்கள் சபை தலைவர் எம். தியகராஜன், செயலர் எம். குணசேகரன் உள்ளிட்ட விவசாயிகள் , விவசாய கூலித் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில்  கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments