முகப்பு
செய்திகள்

வாகை சூட வா தொடரில் விஜய் பட நாயகி!

நடிகை கெளசல்யா நடிக்கும் தொடர்கள் குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 12:44 pm IST
வாகை சூட வா தொடர்
பகிர்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை கெளசல்யா, தற்போது தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கெளசல்யா. இவர் தொடர்ந்து நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன் போன்ற வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கௌசல்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மனைவி தொடரின் மூலம் தொடரில் சின்ன திரையில் அறிமுகமான நடிகை கெளசல்யா, தொடர்ந்து கண்டேன் சீதையை, அக்கா, அலைபாயுதே, சுந்தரி உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்ன திரை ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதனிடையே, கார்த்திகை தீபம் தொடரில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். அண்மையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடரில் இணைந்தார்.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வாகை சூட வா தொடரில் நடிகை கெளசல்யா, சகுந்தலா தேவி பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரின் வருகையால் கதைக்களம் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Kausalya, who was a leading actress in Tamil cinema, is currently focusing on television serials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments