FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய மணிரத்னம்!

விஜய் சேதுபதி - சாய் பல்லவியின் திரைப்பட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடக்கம்...

Updated On : 27 ஜூலை 2026, 5:01 pm IST
இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
பகிர்:

இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியின் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்த நிலையில், அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது.

Advertisement

Advertisement

தாடி, மீசை இல்லாத விஜய் சேதுபதியுடன் சாய் பல்லவி நடந்து வரும் அக்காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் கொல்கத்தாவில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director Mani Ratnam is directing a film starring actors Vijay Sethupathi and Sai Pallavi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments