சாய் அபயங்கர் இசையில்..! விஜய் சேதுபதியின் பத்தா பட முதல் பாடல்!
விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள “பத்தா” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1960-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பத்தா படத்தின் “மகளே” எனும் முதல் பாடலை இன்று (செப். 9) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சாய் அபயங்கர் மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
ஏற்கெனவே, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், “பத்தா” படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The first song from the movie "Baththa" starring actor Vijay Sethupathi in the lead role, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.