வரவேற்பைப் பெறும் விஜய் சேதுபதியின் பத்தா! வசூல் எவ்வளவு?
பத்தா திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது...
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள பத்தா திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், இப்படம் இரண்டு நாள்களில் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் ஞாயிற்றுக்கிழமையும் மேலும் வணிகம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான செல்லமே மகளே, ஊரோட ஒத்த டான் ஆகிய பாடல்கள் இப்படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
The film baththa, starring Vijay Sethupathi, has received a positive reception from fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.