பத்தா இரண்டாவது பாடல் வெளியீடு!
பத்தா திரைப்படத்தின் புதிய பாடல்....
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் அட்லி தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1980-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் இடம்பெற்ற மகளே பாடலும் கவனம் பெற்றுவரும் நிலையில், இரண்டாவது பாடலான ஊரோட ஒத்த டான் என்கிற புதிய பாடலை வெளியிட்டுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான இதனை கேகே நகர் கானா ஜீவா எழுதியுள்ளார்.
The second song from the movie baththa, starring actor Vijay Sethupathi, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.