இஞ்சி வெல்லம்... விஜய் சேதுபதி - சாய் பல்லவி திரைப்படப் பெயர்!
நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் பெயர்...
நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் கொல்கத்தாவில் தொடங்கியது.
அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது.
Advertisement
Advertisement
தாடி, மீசை இல்லாத விஜய் சேதுபதியுடன் சாய் பல்லவி நடந்து வரும் அக்காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது, இப்படத்திற்கு, இஞ்சி வெல்லம் எனப் பெயரிட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் நவீன காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The title of the new film starring actors Vijay Sethupathi and Sai Pallavi has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.